பிரிட்டனில் போதைக்கு அடிமையாகும் இளம் பெண்கள்: ஆய்வில் தகவல்


avatar

பிரிட்டனில் உள்ள இளம் பெண்களில் பெரும்பாலோனோர் போதையில் மிதப்பதையே விரும்புவதாக அந்நாட்டு சுகாதார துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள பள்ளிகளில் பிரிட்டன் சுகாதாரத்துறை ஒரு ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் பிரிட்டனைச் சேர்ந்த 55 சதவிகிதம் இளம் பெண்கள் தீவிர மதுவுக்கு அடிமையாகி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் மாதத்தில் 5 தடவைக்கு மேல் மது அருந்துகின்றனர்.

பெரும்பாலான பெண்கள் எப்போதும் போதையில் மிதப்பதையே விரும்புகின்றனர். அதே நேரத்தில் அவ்வப்போது மிதமாக குடிப்பவர் பட்டியலில் போர்ச்சுக்கல், மால்டா மற்றும் எஸ்டோனியா நாட்டு பெண்கள் உள்ளனர்.

இந்த ஆய்வறிக்கையை அரசின் பொதுத்துறையிடம் சமர்பித்த சுகாதாரத்துறை, அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களால் தான் குற்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.

எனவே, அவற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!