Google முக்கிய வார்த்தைகள்


ANTHAPPAARVAI

முக்கிய வார்த்தைகள்
தனிப்பட்டத் தகவல்
Google கணக்கு
குக்கீ
பெயரில்லாத அடையாளங்காட்டி
IP முகவரி
சேவையகப் பதிவுகள்
நுட்பமான தனிப்பட்ட தகவல்
தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத தகவல்
பிக்சல் குறிச்சொல்
தனிப்பட்டத் தகவல்

பெயர், மின்னஞ்சல் முகவரி அல்லது பில்லிங் தகவல் அல்லது இந்தத் தகவலின் மூலம் Google இல் இணைக்கப்பட்ட பிற தரவு போன்ற தகவல் உங்களை தனிப்பட்ட முறையில் அடையாளம் காண நீங்கள் வழங்கியதாகும்.

Google கணக்கு

Google கணக்கிற்குப் பதிவுசெய்து சில தனிப்பட்ட தகவலை (உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்) எங்களுக்கு வழங்குவதன் மூலம், எங்களின் சில சேவைகளை நீங்கள் அணுகலாம். Google சேவைகளை அணுகும் போதும், மற்றவர்களின் அங்கீகாரமற்ற அணுகலில் இருந்து உங்கள் கணக்கைப் பாதுகாக்க இந்தக் கணக்குத் தகவல் அதிகாரப்பூர்வமாக பயன்படும். உங்கள் Google கணக்கு அமைப்புகள் மூலம் எந்த நேரத்திலும் உங்கள் கணக்கை திருத்தலாம், முடித்தும் கொள்ளலாம்.

குக்கீ

குக்கீ என்பது நீங்கள் ஒரு வலைத்தளத்தை பார்வையிடும்போது, உங்கள் கணினிக்கு அனுப்பப்படும் எழுத்துக்குறிகளின் தொகுதியைக் கொண்ட சிறிய கோப்பு ஆகும். நீங்கள் மீண்டும் வலைத்தளத்திற்கு செல்லும் போது, குக்கீ அந்தத் தளத்திலுள்ள உங்களது உலாவியை அங்கீகரிக்க அனுமதிக்கிறது. பயனர் விருப்பத்தேர்வுகளையும், பிற தகவலையும் குக்கீ சேமிக்கக் கூடும். எல்லா குக்கீகளைப் புறக்கணிக்கும்படியும் அல்லது குக்கீயை அனுப்பும்போது தெரிவிக்கும்படியும் உங்கள் உலாவியை மீட்டமைக்கலாம். எனினும், சில இணைய அம்சங்கள் அல்லது சேவைகள் குக்கீகள் இல்லாமல் சரியாக இயங்காமல் போகலாம்.

பெயரில்லாத அடையாளங்காட்டி

பெயரில்லாத அடையாளங்காட்டியானது குக்கீ தொழில்நுட்பம் இல்லாத சில மொபைல் சாதனங்கள் உள்ளிட்ட தளங்களில் குக்கீகளாக பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களின் சீரற்ற சரமாகும்.

IP முகவரி

இணையத்துடன் இணைக்கப்பட்ட ஒவ்வொரு கணினியும் இணைய நெறிமுறை (IP) முகவரி எனப்படும் தனித்த எண்ணைப் பெற்றிருக்கும். இந்த எண்கள் நாடு-சார்ந்த பகுதிகளின் அடிப்படையில் ஒதுக்கப்படும், நாடுகளை அடையாளம் காண கணினியிலிருந்து இணையத்திற்கு இணைக்கும் IP முகவரி பயன்படுத்தப்படும்.

சேவையகப் பதிவுகள்

பெரும்பாலான வலைத்தளங்கள் போல, தளங்களைப் பார்வையிடும் போது எங்கள் சேவையகங்கள் தானாகவே பக்கக் கோரிக்கைகளைப் பதிவு செய்யும். இந்த “சேவையக பதிவுகள்” வலை கோரிக்கை, இணைய நெறிமுறை முகவரி, உலாவி வகை, உலாவி மொழி, உங்கள் கோரிக்கையின் தேதியும் நேரமும் மற்றும் உங்கள் உலாவியை தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குக்கீகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.

“cars” என்ற தேடலைத் தொடர்ந்து, அதன் பாகங்களின் பிரிவு கொண்ட பதிவு உள்ளீட்டின் சிறந்த எடுத்துக்காட்டு இதோ:

123.45.67.89 - 25/Mar/2003 10:15:32 -
http://www.google.com/search?q=cars -
Firefox 1.0.7; Windows NT 5.1 - 740674ce2123e969
பயனரின் ISP ஆல் பயனருக்கு ஒதுக்கப்பட்ட இணைய நெறிமுறை முகவரி 123.45.67.89 ஆகும்; பயனரின் சேவையைப் பொருத்து, பயனர் ஒவ்வொருமுறை இணையத்தை இணைக்கும்போதும் சேவை வழங்குநர் வெவ்வேறு முகவரியை ஒதுக்கலாம்;
25/Mar/2003 10:15:32 என்பது கேள்வியின் தேதி மற்றும் நேரமாகும்;
http://www.google.com/search?q=cars ஆனது தேடல் வினவலை உள்ளடக்கிய கோரப்பட்ட URL ஆகும்;
Firefox 1.0.7; Windows NT 5.1 என்பது பயன்படுத்தப்படும் உலாவி மற்றும் இயக்க முறைமையாகும்; மற்றும்
740674ce2123a969ஆனது இந்த குறிப்பிட்ட கணினி முதல் முறையாக Google ஐ பார்வையிட்டதற்கான தனிப்பட்ட குக்கீ ID ஆகும். (குக்கீகள் பயனர்களால் நீக்கப்படலாம். பயனர் கணினியிலிருந்து Google இல் கடைசியாக பார்த்த வரைக்கும் இருக்கிற குக்கீயை நீக்கிவிட்டால், அடுத்த முறை அந்த குறிப்பிட்ட கணினியிலிருந்து Google ஐ அவர் பார்க்கும்போது அது தனிப்பட்ட குக்கீ ID ஆக ஒதுக்கப்பட்டிருக்கும்).
நுட்பமான தனிப்பட்ட தகவல்

இது நம்பகமான மருத்துவ விதிகள், இனப் பாகுபாடு அல்லது இன தோற்றங்கள், அரசியல் அல்லது மத நம்பிக்கைகள் அல்லது பாலியல் தொடர்பான தனிப்பட்ட தகவலின் குறிப்பிட்ட வகை ஆகும்.

தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத தகவல்

இந்த தகவல் பயனர்களைப் பற்றி பதிவுசெய்யப்பட்டதாகும். எனவே தனிபட்ட முறையில் அடையாளம் காணும் பயனரைப் பிரதிபலிக்காது அல்லது குறிப்பிடாது.

பிக்சல் குறிச்சொல்

பிக்ஸல் குறிச்சொல்லானது வலைத்தளங்கள் அல்லது மின்னஞ்சலின் பொருளில் வைக்கப்பட்ட ஒரு வகை தொழில்நுட்பம் ஆகும். வலைத்தளங்கள் அல்லது மின்னஞ்சல்கள் திறக்கப்படும்போதோ அணுகும்போதோ அவற்றின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்காக பயன்படுகிறது, இது பொதுவாக குக்கீகளுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.

https://www.google.com/policies/privacy/key-terms/



"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!