புதிய உறுப்பினர்களுக்கான விதிமுறைகள்வணக்கம்!
இங்கு இணையும் உறுப்பினர்கள் அனைவரும் என்னைப் போன்ற உணர்வுள்ள மனிதர்கள் தான் என்பதை நான் அறிவேன். எனவே நான் பெரிதாக விதிமுறைகள் எதுவும் வகுக்கவில்லை!
நாம் அனைவரும் மனிதாபிமானமுள்ள தமிழர்கள்! பண்புள்ள பாரம்பரியத்தில் பிறந்தவர்கள்! எனவே பொது வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நமது பெற்றோர்கள் மூலம் நாம் படித்திருக்கின்றோம். அதைப் பின்பற்றியே நடப்போம்!
"நீ மரியாதையை எதிர்பார்த்தால், முதலில் மற்றவரை மதிக்க கற்றுக் கொள்" என்ற முன்னோர்களின் வாக்குப்படி நான் உங்களையும், உங்கள் உணர்வுகளையும் மதிக்கின்றேன். மனிதர்கள் அனைவரும் ஏதாவது ஒரு சந்தர்பத்தில் தவறு செய்ய நேரிடலாம். அவ்வாறு நேரும் சமயங்களில் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அதை தெரியப்படுத்தி திருத்திக் கொள்வோம்.
உங்கள் கருத்துக்களுக்கும், படைப்புகளுக்கும் கண்டிப்பாக இங்கு மதிப்பளிக்கப் படும். அதே நேரத்தில் அவதூறு செய்திகள் பகிராமல் உங்களுடைய சொந்த படைப்புக்களையும், உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் அநாகரீகமான முறையில் நடந்து கொள்ள மாட்டீர்கள் என்று முழுமையாக நம்புகின்றேன். ஏனென்றால்? உங்கள் அனைவரையும் நான் என்னைப் போலவே கருதுகின்றேன்.நமது எழுத்துக்கள் நம்மை அடையாளப் படுத்தும்!@அந்தப்பார்வை.
குறிப்பு: IP முகவரியின் வீரியத்தை நான் Google-லிடமும் எனக்கு இணையம் வழங்கும் நிறுவனத்திடமும் ஒப்படைத்திருக்கின்றேன்.