கிளிசரின் போட்டு அழ மாட்டேன்: ‘சீரியல்’ சந்தோஷி


avatar

சன் டிவியில் ஒளிபரப்பாகும் இளவரசி தொடரில் அழுவது ஒன்றே குறியாக வைத்து நடித்து வருகிறார் சந்தோஷி. சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்று மீண்டும் சின்னத்திரைக்கு வந்தவர்களில் சந்தோஷியும் ஒருவர். தன்னுடைய மீடியா பயணம் பற்றி அவர் கூறுவதை படியுங்களேன்.
அம்மா பூர்ணிமா முன்னாள் டிவி நடிகை. நான் எட்டு வயதில் இருந்து சீரியலில் நடிச்சுக்கிட்டு இருக்கேன். 13 வயதில் வாழ்க்கை சீரியலில் நடித்தது இன்னமும் என்னை அடையாளப்படுத்துகிறது. எனக்கு குறும்புத்தனமான கேரக்டர் பண்ண ரொம்ப பிடிக்கும். ரொம்ப அழுது நடிக்கிற மாதிரி கேரக்டர் பிடிக்காது. ஆனா எனக்கு கிடைப்பது எல்லாம் அழுகை சீரியல்தான் கிடைக்கின்றன. நம் தமிழ்நாட்டு பெண்களை பொறுத்தவரை கிளிசரின் போட்டு அழுறவங்களைத்தான் பிடிக்குது.
தமிழ் சீரியலைப் பொருத்தவரை இன்னும் நிறைய வளரணும், மாற்றங்கள் வரணும்னு நினைக்கிறேன். அதே மும்பை சீரியல் எல்லாம் பார்த்தா ரொம்ப கலர் ஃபுல்லா இருக்கும். இந்த மாதிரி தமிழ்லயும் வரணும்னு அடிக்கடி நினைப்பேன். அதனாலயே என் காஸ்டியூம், என் மேக்கப் எல்லாத்துக்கும் நிறைய அக்கறை எடுத்துக்குவேன்.
“இளவரசி’ தொடருக்கு மக்கள் கிட்டே இருந்து நல்ல வரவேற்பு இருக்கு. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் நிலையை சொல்லும் கதை. இதில் எனக்கு ரொம்ப ஹோம்லியான கேரக்டர்.
சன் டிவியில் “பொண்டாட்டி தேவை’ என்ற காமெடி தொடர் செய்தது எனக்கு பிடித்திருந்தது. அதேமாதிரியான கேரக்டரைத்தான் நான் விரும்புகிறேன். சீரியலில் நடிப்பது தவிர எனக்கு புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ்வா பண்ணணும்னு ஆசையிருக்கு. அதை தவிர ஓய்வு நேரத்தில் வெளியில் சுத்துவது ரொம்ப பிடிக்கும். எனக்கு சின்னத்திரையில் தேவிப்ரியாவோட நடிப்பு ரொம்ப நல்லா இருக்கும்னு ஒரு பேர் இருக்கு. என்ன கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிடுவாங்க.
“அரசி’ தொடரை பொறுத்தவரை பத்து சீரியல்ல நான் நடிப்பதை ஒரே சீரியல்ல நடித்தேன். ஒன்பது கேரக்டர் அந்த ஒரு சீரியல்ல கிடைச்சது. அந்த எல்லா கேரக்டருமே ரொம்ப சேலஞ்சிங்கா இருந்தது. சமுத்திரகனி இயக்கிய தொடர் எப்படி பட்டவங்களா இருந்தாலும் அவர் வேலை வாங்கிடுவார்.
ராதிகாவைப் பார்க்கும்போது எனக்கு பிரமிப்பாக இருந்தது. அவ்வளவு துணிச்சலான, திறமையானவங்களோட பக்கத்தில் இருந்தது பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவங்க துணிவும், திறமையும் எதையாவது சாதிக்கணும்னு இன்ஸ்பரேஷனா இருந்தது நானும் சாதிப்பேன் என்கிற நம்பிக்கை எனக்குள் ஏற்படுத்தியவர் ராதிகா.
சீரியல் பண்றதை விட ரியாலிட்டி ஷோ பண்றது ரொம்ப கஷ்டம். என்று நன்றியுடன் கூறினார் சந்தோஷி. 5 நிமிட டான்ஸ் நிகழ்ச்சிக்காக பல மணிநேரம் உழைக்கணும். ஆனா அதுதான் இளைஞர்களிடம் அதிகமாக ரீச் ஆகுது என்று சந்தோஷமாக சொன்னார் சந்தோஷி.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!