பிரேக் பிடிக்காததால் பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேனில் சிக்கி தவித்த 17 மாணவர்கள் மீட்பு


ANTHAPPAARVAI

பிரேக் பிடிக்காததால் பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேனில் சிக்கி தவித்த 17 மாணவர்கள் மீட்பு Tamil-Daily-News-Paper_61524164677
ஊத்துக்கோட்டை 25.07.2012: பிரேக் பிடிக்காததால் பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. வேனில் சிக்கிய மாணவர்களை பேரூராட்சி செயல் அலுவலர், பொதுமக்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஊத்துக்கோட்டை அருகே இன்று காலை நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஊத்துக்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் 20க்கு மேற்பட்டோர் திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கிறார்கள். இன்று காலை 8 மணியளவில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் திருவள்ளூர் புறப்பட்டது. டிரைவர் பூபதி வேனை ஓட்டிச் சென்றார். திருவள்ளூர் & ஊத்துக்கோட்டை சாலை மயிலாப்பூர் கிராமம் அருகே வரும்போது டிரைவர் சாலை வளைவில் திரும்ப பிரேக் பிடித்துள்ளார். அப்போது வேனில் பிரேக் பிடிக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பூபதி வேனை வலது பக்கம் திருப்பியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை மீறி வேன் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

வேனில் இருந்த மாணவர்கள் அலறினர். அப்போது அந்த வழியாக திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் ஜீப்பில் கலெக்டர் அலுவலகம் சென்று கொண்டிருந்தார். பள்ளி வேன் விபத்துக்குள்ளானதை பார்த்தவர் ஜீப்பை நிறுத்தி விட்டு வந்தார். பொதுமக்கள் உதவியுடன் வேனின் கண்ணாடியை உடைத்து அதிலிருந்த 17 மாணவர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. டிரைவரும் மீட்கப்பட்டார். 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தோரை கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். சிகிச்சைக்கு பிறகு பெற்றோர் அவர்களை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!