கூகுள் மொழிபெயர்ப்பும் ரகசியமும்!


ANTHAPPAARVAI


கூகுள் மொழிபெயர்ப்பு ஒரு மிகச்சிறந்த பயன்பாடு ஆகும். இனையத்தில் உலவும் பலரும் இதைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. இனையத்தில் கூகுள் மொழிபெயர்ப்பை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூகுள் மொழிபெயர்ப்பின் உதவியால் இன்று தமிழில் எழுதுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதும் உண்மைதான்.

ஆனால், இதில் தமிழில் எழுதி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது 99% சரியாகவே வருகிறது. ஆனால் ஆங்கிலத்தில் எழுதி தமிழில் மொழிபெயர்க்கும் போது அவ்வளவு சரியாக மொழிபெயர்ப்பதில்லை. இதன் காரணம் என்னவென்றால் இன்று இணையத்தில் தமிழில் எழுதுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் தமிழர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதை அமெரிக்க ஐக்கிய நாடுகள் எளிதில் அரிந்து கொள்வதற்காகவே இந்த அமைப்பு மேற்கொள்ளப் பட்டிருக்க வேண்டும்.

எனவே இதுவும் ஒரு உளவு பார்க்கும் முறை தான். ஏனென்றால் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்க்கும் போது, அதே ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் எளிதில் மொழிபெயர்க்க முடியும் தானே? ஆனால் அவ்வாறு நடை பெறவில்லையென்றால் அதில் ஏதோ சூழ்ச்சி இருக்க வேண்டும் தானே?

ஏனென்றால், தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு போகும் போது சரியாக இருந்த ரோடு, சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு அதே ரோட்டில் உடனே திரும்பி வரும் போது மேடு பள்ளங்க‌ளாக இருக்க முடியுமா?

சும்மா!... "மாறுபட்ட சிந்தனை" என்று தலைப்பில் போட்டுவிட்டு, இப்படியெல்லாம் யோசிக்க வில்லை என்றால் நம்ம தமிழர்கள் கேள்வி கேட்பார்களே அதான் இப்படியெல்லாம் சிந்திக்க வேண்டியிருக்கு!!

-@nthappaarvai!

avatar

ஏன் இப்படி கூட இருக்கலாம். அதாவது தாய்மொழி ஆங்கிலமாக இருப்பவர்களுக்கு தமிழை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இருக்காது. ஆனால், தமிழை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு ஆங்கிலம் அவசியம் என்பதை அறிந்ததனால் இவ்வாறு செய்திருக்கலாம் அல்லவா?
அதனால் தான் தமிழுக்கான ஆங்கிலம் சரியாக வருகிறது!

இதுவும் மாறுபட்ட சிந்தனைதான். இது எப்படி இருக்கிறது?

ANTHAPPAARVAI

இதுவும் நல்லாத்தான் இருக்கு! Basketball
எப்படியோ... நம்ம ஆளுங்க ஆங்கிலத்தை கத்துகிட்டா சரிதான்!!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!