மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் தேடுவதும், எதிர்பார்ப்பதும் புதுமையைத்தான்! அதே நேரத்தில் அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதும் இந்தப் புதுமையைத்தான்.
ஆரம்ப காலம் முதலே மனிதன் புதுமையை ஏற்றுக்கொள்ள முன்வந்ததில்லை!
உலகம் அறிந்த ஒரு உதாரணத்தை சொல்ல வேண்டுமானால், விஞ்ஞானி கலீலியோவை சொல்லலாம். நான் பல கட்டுரை எழுதும் போதெல்லாம் உலக உருண்டையைப் பற்றி அடிக்கடி பேசுவதுண்டு. ஏனென்றால், ஒட்டுமொத்த உலக மக்களும் பூமி தட்டையானது என்று சொல்லிக்கொண்டும், நம்பிக்கொண்டும் இருந்த போது புதிதாக ஒருத்தர் பூமி தட்டையானதில்லை "உருண்டையானது" என்று சொன்னார். விளைவு? அவரைப் "பைத்தியம்" என்று சொல்லி கல்லாலேயே அடித்துக் கொன்றார்கள்!
மனிதன் காலம் காலமாக பிறர் சொல்வதையும், சொல்லி வைத்ததையுமே பின்பற்றி வாழ்கிறான். ஒருவர் சொல்லும் கருத்துக்கள் நம்மை மேலும் சிந்திக்கவிடாமல் கட்டிப்போடுமேயானால் அதுவரை அதுதான் நமக்கெல்லாம் வேதம்! ஆனால், யாராவது ஒருவர் முன்வந்து அதைப்பற்றி மேலும் சிந்திக்கத் தொடங்கினால் நமக்கு மேலும் புதிய சிந்தனைகளும், புதிய தகவல்களும் கிடைக்கும். (நான் சொல்வது புதிதாக சிந்திப்பதைப் பற்றி. யாரும் விதண்டாவாதத்தைக் கற்பனை செய்து கொள்ளாதீர்கள்! ஏனென்றால்? (புதிய சிந்தனை) வாதம் என்பது தனது திறமையை நிரூபிப்பது! விதண்டாவாதம் என்பது மற்றவர்களின் திறமையை நிராகரிப்பது!)
மனிதன் ஏன் புதுமையை உடனே ஏற்றுக்கொள்வதில்லை? ஏனென்றால் மனிதன் எப்போதுமே பிறர் சொல்வதை மட்டுமே ஏற்றுக்கொள்ளவும், கடைபிடிக்கவும் நினைக்கின்றானே தவிர, தானாக எதையாவது சிந்திப்போம், உருவாக்குவோம் என்று முயற்சிப்பதே இல்லை. அதிலும் முக்கியமாக பலர் சேர்ந்து சொல்வதைத்தான் உடனே ஏற்றுக் கொள்கின்றான். அந்தப் பலர் என்பது பணம் படைத்தவர்களையும், பதவியில் இருப்பவர்களையுமே குறிக்கும். அதனால் தான் "ஏழை சொல் அம்பலம் ஏறாது" என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
புதுமை என்பது, யாரோ ஒருவரால் கண்டுபிடிக்கப்படுவது அல்லது உருவாக்கப்படுவது. அதனால்தான் புதுமையை உடனே யாராலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதிலும் குறிப்பாக புதுமை என்பது, யாருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கும். அல்லது ஏதாவது ஒன்றை முறியடிப்பதாக இருக்கும்! அதாவது யாருக்கும் தெரியாததாக இருந்தால் அதை நாளடைவில் ஏற்றுக்கொண்டு விடுவார்கள். ஆனால், ஏதாவது ஒன்றை முறிடியடிப்பதாக இருந்தால் அதனால் லாபம் அடைபவர்கள் அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்றே முயற்சிப்பார்கள். அதன் அடிப்படையில்தான் உலகம் தட்டையானது என்று சொல்லி தாங்கள் தான் விஞ்சானிகள் என்று லாபம் அடைந்தவர்கள் மத்தியில் உலகம் உருண்டை என்று சொன்ன கலீலியோவை பைத்தியமாக்கினார்கள்!!
ஒரு மனிதன் ஒன்றின் தரத்தை குறைத்து மதிப்பிடுகிறான் என்றால், அவன் அதனால் லாபம் அடைகிறான் என்பது பொருள். உதாரணமாக தங்கமும் பித்தளையும் பழகியவர்களுக்கு பார்த்தவுடன் தெரிந்துவிடும். கவரிங் வேண்டுமானால் தங்கத்தைப் போல இருக்கலாம் ஆனால் தங்கம் ஒருநாளும் கவரிங்கைப் போல இருக்காது. ஆனால், கவரிங் நகைகளை யாரும் உரசிப் பார்ப்பதில்லை. தங்கத்தைத்தான் உரசிப் பார்ப்பார்கள். ஏனென்றால்? அதன் மூலம் அவன் கொஞ்சம் சுரண்டிக் கொள்கிறான். மேலும் முதல் நாள் வாங்கிய தங்க நகையை மறு நாளே கொண்டு விற்கப் போனால் அதை பழைய நகையாகத்தான் மதிப்பிடுவார்கள். ஏனென்றால் அதன் மூலம் அவர்கள் லாபம் அடைய முயற்சிக்கிறார்கள்! So, லாபம் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தினாலேயே சிலர் புதுமையை ஏற்றுக்கொள்ள விடாமல் சூழ்ச்சியும் செய்கிறார்கள்!
இனிமேல் தான் இந்தக் கட்டுரையின் சாராம்சத்திற்குள் நுழையப் போகிறேன்....
சினிமா!
சினிமாவில் பலரும் பல புதிய முயற்சிகளையும்(!), பல புதிய கோட்பாடுகளையும்(?) புகுத்தி வருகின்றனர். ஆனால், ஒரு மிகப் பெரிய புதுமை ஒன்றை சினிமாத்துறையை சார்ந்த சிலர் ஒன்று கூடித் தடுத்து வருகின்றனர்!
ஆம், எனது (தகாதவன்) டிஜிட்டல் கதாநாயகியைப் போல, பல புதுமையான வசதிகளுடன் களம் இறங்கியிருக்கின்ற "டிஜிட்டல் கேமராவை" பலரும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான் அந்தப் புதுமை!
இதற்கு சாதாரண காரணம்? யாருக்கும் அந்தக் கேமராவை பயன்படுத்தத் தெரியாததுதான்! எனக்குத் தெரிந்தவரையில், விண்டோஸ் XP ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை தங்களது கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யக்கூடாது என்று என்னிடம் சண்டை போட்டவர்களும் உண்டு! (பேசிக்கலி நான் ஒரு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் & சர்வீஸ் இஞ்சினியர். அதாவது இணையதளத்துல இருக்குற கணினித்தகவல்களை எல்லாம் படிச்சுட்டு கருத்து பேசுறவன் இல்லை. ஒரு கம்ப்யூட்டரை என்கிட்டே குடுத்தீங்கன்னா, அந்த மவுசுக்குள்ள புகுந்து மானிட்டர் வழியா வெளியில வந்துடுவேன்!) சரி.. சரி.... விளம்பரம் பன்னல!
ஏன் XP வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்றால் விண்டோஸ் 98 மற்றும் 2000 இரண்டிலும் பழகிப் போனவர்களுக்கு Win-XP திரையையும் போல்டர்களையும் பார்க்கும் போதே பயம் வருகிறதாம்! பிறகு ஒரு நாள் சொல்லிக்கொடுத்த பிறகு "ரெண்டும் ஒன்னாத்தான் இருக்கு... கொஞ்சம் வித்தியாசம் ஹி... ஹி... ஹி..." என்று சொன்னவர்களும் உண்டு. இன்னைக்கு, விண்டோஸ் 9 எப்ப வெளிவரும்னு கேக்குற அளவுக்கு பல பேரை மாத்தியிருக்கேன்!!
அதே போல இன்று, மிகவும் அதிநவீன வசதிகளுடன் களம் இறங்கி இருக்கின்ற டிஜிட்டல் கேமராவையும் பல காரணங்கள் கூறி தடுத்து வருகின்றனர்! அதில் வேடிக்கையான ஒன்று "டிஜிட்டல் கேமராவில் படம் எடுத்தால் அது ஓடாது!" என்பதுதான்.
"இந்த மாதரி அறிவிளிகளை எல்லாம் என்னதான் செய்வது?" -என்று யாரோ தூரத்திலிருந்து கேட்கும் ஒரு குரல்(Mind Voice) எனக்குக் கேட்கிறது! அந்தக் குரலுக்கு நான் பதில் சொன்னால் பல சினிமாக்காரர்களுக்கு நான் எதிரியாக்கிப் போவேன்! ஆனாலும் என்ன செய்வது அநியாயத்தைப் பற்றித் தெரிந்திருந்தும் என்னால் அதைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது!
ஒரு அரசியல்வாதி தவறு செய்தால் நமது திரைப்படத்தில் நாம் அதை சுட்டிக் காட்டுகிறோம்! ஒரு காவல் துறை அதிகாரி தவறு செய்தால் அதையும் நாம் சுட்டிக்காட்டுகிறோம். அப்படியிருக்கும் போது சினிமாத்துறையில் நடக்கும் அநியாயங்களையும் நாம் சுட்டிக் காட்டத்தானே வேண்டும்?
இதோ தூரத்தில் இருந்து கேட்கும் அந்தக் குரலுக்கான எனது பதில்.
"டிஜிட்டல் கேமராவில் படம் எடுத்தால் ஓடாது" என்று சொல்வது அவர்களின் அறியாத்தனம் இல்லை. அது சூழ்ச்சி! அதாவது டிஜிட்டல் கேமராவில் சினிமாத் தயாரிக்கும் போது பலருக்கு கிடைக்க வேண்டிய "கமிஷன்" கிடைக்காமல் போகிறது! அதனால் தான் அவர்கள் டிஜிட்டல் கேமரா மீது வாஸ்த்து சோதிடம் எல்லாம் கூறுகிறார்கள்!
எப்படி என்றால்? சாதாரணமாக ஒரு திரைப்படம் தயாரிக்க 100 முதல் 120 பிலிம் கேன்கள்(ரோல்கள்) தேவைப்படுகிறது. ஒரு கேன் என்றால் 400 அடிகளில் இருந்து தொடங்கும். ஒரு கேனின் விலை 13,000 அல்லது 14,000 ஆயிரம் வரை கிடைக்கும். இந்த கேனின் விலையில்தான் பலருக்குக் கமிஷன் கிடைக்கிறது. உதாரணமாக ஒரு கேனுக்கு ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் என்று வைத்துக் கொண்டால் நூறு கேனுக்கு எவ்வளவு கிடைக்கும்?...
ஆனால், டிஜிட்டல் கேமராவில் படம் தயாரிக்கும் போது இந்தக் கமிஷனுக்கே வேலை இல்லாமல் போகிறதா? அதனால் தான் எல்லோரும் பதறிப்போய் வாஸ்த்து சொல்கிறார்கள். சினிமாக்காரங்களுக்குத்தான் சென்டிமென்ட் ரொம்ப ஜாஸ்தியாச்சே... அதனால இந்த வாஸ்துவைக் கேட்டதும் டிஜிட்டல் கேமரா பக்கம் யாருமே போகப் பயப்படுறாங்க.
அதுக்காகவே ஓடாத கதையை லோ பட்ஜெட்டுல டிஜிட்டல் கேமராவுல சினிமாவா எடுத்துட்டு அது ஓடாததுக்குக் காரணம் இந்த டிஜிட்டல் மேமராதான் அப்படின்னு முத்திரை குத்தி ஓரமாப் போட்டுட்டாங்க. ஆனா, ஹாலிவுட் படம் எல்லாம் இந்த டகால்டி(Digital) கேமரால தான் எடுக்குராங்கங்கறது நாம எல்லாருக்கம் பத்திரிகை அடிச்சு பந்தி வச்சு சொல்லணும்!
அதுக்காக டிஜிட்டல்ல படம் பண்ணும் போது நிறைய பணம் மிச்சமாகும்னு யாரும் கற்பனை பண்ணிக்காதீங்க. பிலிம்ல பண்ணும் போது வேஸ்டாகுற பிலிமுக்கான பணம் மட்டும் தான் மிச்சம். ஆனது அதுவும் DI பண்ணும் போது சரியாப்போயிடும். அதாவது செலவு ஒண்ணுதான் ஆனா குவாலிட்டி, படம் பண்ணுறதுல இருக்குற சுதந்திரம், கேமராவைக் கையாள்கிற சௌகரியம் இப்படி நிறைய வசதிகள் இருக்கு. லென்சை கலட்டிட்டா அதுல போட்டோவும் எடுக்கலாம். போட்டோ கேமெரா மாதரி உள்ளங்கைக்குள்ள அடங்கிடும் அந்தக் கேமரா. பேசிக்கலி அது Still கேமராவேதான்!! பிலிம்ல படம் பண்ணும் போது "ஐயோ பிலிம் வேஸ்டாகிடுமேனு தயாரிப்பாளர் பயப்படனும். ஆனால் டிஜிட்டல்ல கண்ணா பின்னான்னு சூட் பண்ணலாம்!
நான் முன்னாடியே சொன்ன மாதரி புதுமைங்கறது, ஒன்னு யாருக்கும் தெரியாததா இருக்கும் இல்லன்னா எதையாவது முரியடிக்கிறதா இருக்கும். இந்த டிஜிட்டல் கேமரா கமிஷனை முறியடிக்கப் போகுதுங்கரத்தை பொறுத்திருந்து பாருங்க!! CANON 5D CEMARA அப்படின்னு Youtube-ல தேடிப்பாருங்க நண்பர்களே. அந்தக் கேமராவோட பயன் புரியும்!
இதல்லாம் எனக்கு எப்படி தெரியும்ன்னு அந்தக் குரல் மறுபடியும் கேக்குது. அதாவது பேசிக்கலி நான் ஒரு எடிட்டர்!
So , நண்பர்களே... ஆத்திரப் படாமல் புதுமைக்கு வழிவிடுங்கள். சம்பாதிப்பதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. அனால், சாதிப்பதற்கு புதுமைதான் கை கொடுக்கும்!!