
ஏமாந்து போனதால்...
இப்போது இணையத்தைக் காதலிக்கிறேன்...
நீ அதில் இணைந்திருப்பதாக நினைத்து!!
உன்னோடு நான் பேசியதுண்டு
உதடுகளால் அல்ல உணர்வுகளால்!
உன்னை நான் பார்த்ததும் உண்டு
விழிகளால் அல்ல வார்த்தைகளால்!
உருவம் தெரியாமல் என்
உள்ளத்திற்குள் சிம்மாசனம் போட்டு
அமர்திருக்கும் நீ
என் விழிகளை ஏமாற்றுவது ஏன்?
உருவத்தை காட்டும் கண்ணாடி
உள்ளத்தை காட்டுவதில்லை.
ஆனால் உள்ளத்தைக் காட்டும் நீயோ
உருவத்தை காட்டுவதில்லை.!
ஆம்,
என் உதடுகளுக்கு மட்டும் தான்
உன்னை உச்சரித்துப் "பார்க்க"
அனுமதி கொடுத்திருக்கிறாய்.
எப்போது என் விழிகளுக்கு?...
"அந்தப்பார்வை"