Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)


ANTHAPPAARVAI

ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒன்றாக திரண்டு வந்து, முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கை வைத்தால் எப்படி இருக்கும்?

ஆண்_1: "ஐயா!.. பொது இடத்துல புகைப் பிடிக்கக் கூடாதுன்னு நீங்க சொன்னீங்க, நாங்க அதைக் கேட்டு நடக்குறோம்..."

பெண்_1: "ஆனா... பீடி, சிகரெட்டே வேண்டாம்னு நாங்க சொன்னோமே.... அதை நீங்க கேட்டீங்களா?????"


ஆண்_2: "கள்ளச் சாராயம் குடிக்கக் கூடாதுன்னு நீங்க சொன்னீங்க, நாங்க அதைக் கேட்டு நடக்குறோம்..."

பெண்_2: "ஆனா... ஒயின் ஷாப்பே வேண்டாம்னு நாங்க சொன்னோமே... அதை நீங்க கேட்டீங்களா????"


ஆண்_3: "கல்யாணம் பண்ணிக்காம ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம்னு உங்க சட்டம் சொன்னதை நாங்க கேட்டோம்..."

பெண்_3: "ஆனா, கல்யாணம் நடக்குமாங்கற கேள்விக்குறியோட நிக்கிற எங்க பொண்ணுங்களுக்கு நீங்க என்ன சொல்லப் போறீங்க?

எங்களுக்கு விவரம் தெரியாதுனுதான்யா , உங்களை முதலமைச்சரா தேர்ந்தெடுத்து வச்சிருக்கோம். எங்களுக்கு சேவை செய்யிறதுதான் உங்களோட வேலை, ஆனா, இதுவரைக்கும் நீங்க சொன்னதைத்தான் நாங்க செஞ்சுகிட்டு வர்ரோம்....

ஆண்_1: "மெட்ராசை சென்னைனு சொல்லச்சொன்னீங்க, நாங்க சொன்னோம்!.."

பெண்_2: "பாம்பாயை மும்பைனு சொல்லச்சொன்னீங்க, நாங்க சொன்னோம்!..."

முதியவர்_1: "அவ்வளவு ஏன்யா? காலம் காலமா நாங்க கொண்டாடிக்கிட்டு வந்த தமிழ் வருஷப் பிறப்பைக் கூட, நீங்க சொன்னீங்க அப்படிங்கரதுக்காக... சித்திரையில கொண்டாடாம, தையில கொண்டாடுறோம்!

பெண்_3: "இதுவரைக்கும், இப்படி நீங்க சொன்ன எல்லாத்தையும் நாங்க கேட்டு நடந்தோமே... இந்த ஒரு தடவையாவது நாங்க சொல்லுறதை நீங்க கேளுங்க!! இது ஒண்ணையாவது நாங்க கேக்குற மாதரி எங்களுக்கு செஞ்சி குடுங்க!...... எங்களுக்கு வேண்டாம்யா...! எங்களை விட்டுடுங்க....!"

என்று கூறி, ஓட்டு மொத்த தமிழக மக்களும் முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைக்கப் போகிறார்கள்!!

அப்படி அவர்கள் வைக்கப் போகும் கோரிக்கை என்ன? அவர்கள் எதை வேண்டாம் என்று கூறுகிறார்கள்?

Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)


விரைவில்.....

avatar

சென்னை: தமிழ்நாட்டுக்கு அதிக வருவாயை அள்ளிக் கொடுக்கும் மதுபானக் கடைகளை அடியோடு இழுத்து மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மத்திய அரசை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உருவாக ஒரே வழி என்ன? என்று ஜெயலலிதா தமது ஆலோசகர்களிடம் விவாதித்திருக்கிறார். அப்போதுதான் தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினால் நிச்சயம் பெண்களின் வாக்குகள் அனைத்துமே அதிமுகவுக்கு கிடைக்கும் என்றும் முன்னுதாரணம் மிக்க அரசாக தமிழக அரசு திகழும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இதனை முழு அளவில் ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நிச்சயமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்துவது என்ற முடிவில் ஜெயலலிதா உறுதியாக இருந்தாலும் டாஸ்மாக் அளவுக்கு வருவாய் தரக் கூடிய வழிகள் என்ன என்பதுதான் அவர் எழுப்பிய கேள்வி. இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தரவும் மூத்த அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் முழுமையான அளவில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ள போதும் லாபம் ஈட்டக் கூடிய பட்ஜெட்டை வேளாண்துறை மூலம் சாதித்து வருகிறது அம்மாநில அரசு. குஜராத் அரசு எப்படியான வழிகளில் வருவாயைப் பெருக்குகிறது என்று ஆராயவும் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம்.

அனேகமாக ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்றோ அல்லது அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்றோ இதற்கான அதிரடி அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த ஐடியாவின் பின்னணியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இருக்கலாம் என்கிறார்கள்.

oneindia.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!