நீயும் பேச துடிக்கின்றாய்,
நானும் பேச துடிக்கின்றேன்.
பிறகு ஏன் நமக்குள் இந்த மௌனம்…?
ஓ!.. முதலில் எப்படி பேசுவது
என்று தயக்கமா?
வேண்டாம்!..
பேசவேண்டாம்!..
என்னுள் இருக்கும் உன்னுடன்
நான் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றேன்…
அன்பே!..
நீ செல்லும் திசை எல்லாம்
நானும் சென்று,
உனது பாதச் சுவடுகளை
மெல்ல மிதித்து நடந்து பார்க்கின்றேன்….
ஏன் தெரியுமா?
முதலில்
நமது காலடிகள் பேசி இணையட்டும்!!
+@அந்தப்பார்வை